அமைச்சர் கா சண்முகம்: சட்டங்கள் ஏற்புடையவையாக இருக்க தொடர் மறுபரிசீலனை

1 mins read
86e40ff9-59c5-46dc-8da6-895aae755453
-

சிங்கப்பூரின் சட்ட அமைச்சு, நாட்டின் சட்டங்களைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்துவரும் என் றும் அதன் மூலம் சட்டங்கள் சமூகத்தின் பரிணமிக்கும் தேவை களுக்கு ஏற்றவையாக தொடர்ந்து இருப்பதை அமைச்சு உறுதிப்படுத் தும் என்றும் சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார். அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையை அமைச்சர் நேற்று வெளியிட்டார்.

எடுத்துக்காட்டாக, குற்றவாயல் தண்டனை சட்டத்தை (Penal Code) உள்துறை அமைச்சுடன் சேர்ந்து சட்ட அமைச்சு மறுபரி சீலனை செய்துவருகிறது என்று அவர் கூறினார். புதிய குற்றச்செயல்களை உள் ளடக்குவது, எளிதில் பாதிக்கப் படக்கூடிய குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பை மேம்படுத்தும் நட வடிக்கைகளை நடப்புக்குக் கொண்டுவருவது, பாலியல் குற் றச்செயல்களுக்கான இப்போதைய தண்டனைகள் போதுமா என்பதை மதிப்பிடுவது ஆகியவை இவற்றில் அடங்கும்.

பரந்த முறையில் குடிமை, நீதித் துறை முறையை மறுபரிசீலனை செய்து குடிமை வழக்குகள் தொடர்பான நடைமுறைகளுக்கு ஆகும் செலவைக் குறைக்கவும் அத்தகைய வழக்குகளின் சிக்கல் தன்மையைப் போக்கவும் சட்ட அமைச்சு முயலும்.

மேக்ஸ்வெல் சேம்பர்ஸ் கட்டடம். இந்தக் கட்டடத்தில்தான் சிங்கப்பூர் அனைத்துலக சமரச நிலையம் இருக்கிறது. படம்: ராய்ட்டர்ஸ்