பொதுச் சேவை அமைப்புகளின் நாடாளவிய அணுகுமுறை

பொதுச் சேவை அமைப்புகளின் நாடாளவிய அணுகுமுறை

1 mins read
64ebdc83-e542-4391-a43d-afbcf959c46b
-

சிங்கப்பூரின் பொதுச் சேவை அமைப்புகள் அரசாங்கம் முழுமை யும் தழுவிய அணுகுமுறை யிலிருந்து நாடு முழுவதையும் தழுவும் முயற்சியைக் கைகொள் ளும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள், குடிமக்கள், இதர பங்குதாரர்களை ஈடுபடுத்தி ஒன்றாகச் சேர்ந்து சிறந்த தீர்வு களை உருவாக்குவதன் மூலம் புதிய அணுகுமுறை இடம்பெறும் என்று அவர் விளக்கினார்.

அதிபர் உரைக்கான பொதுச் சேவைத்துறையின் பிற்சேர்க்கை யில் இந்த விவரங்களை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொதுச் சேவைத்துறை பிரதமர் அலுவலகத் தின் ஒரு பிரிவாக இருக்கிறது. அது தொடர்ந்து மற்றவர்களை எட்டி அவர்களின் கருத்துகளை, யோசனைகளைக் கேட்டறிந்து அவர்களின் வெற்றி, தோல்வி களிலிருந்து பலவற்றையும் கற்றுக் கொண்டு தானும் மேம்படும் என்று திரு சான் குறிப்பிட்டார். இந்தத் துறை தொடர்ந்து பொறியாளர்களை உருவாக்கி சிங்கப்பூர் நகர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

தி டெக் ஏபல் இன்னோவேஷன் சென்டர். இங்கு உடற்குறை உள்ளவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு வேலை நியமன வாய்ப்புகள் கிடைக்கின்றன. படம்: The Tech Able Innovation Centre