சிங்கப்பூர், மின்னிலக்க ஆயத்த திட்டம் ஒன்றைத் தொடங்க விருக்கிறது. அறிவார்ந்த நகரில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் பெற்றிருக்கவேண்டிய நவீன வசதிகளை உருவாக்கி கொடுக் கும் வழிவகைகளை அந்தத் திட்டம் விளக்குகிறது. "மின்னிலக்கத் தொழில்நுட் பத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் நம்முடைய முயற்சியில் யாரும் கைவிட்டு விடப்படவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்," என்று அறிவார்ந்த நகர் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். அதிபர் உரைக்கான பிற் சேர்க்கையில் இந்த விவரங்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மின்னிலக்கச் சேவைகளை மக்கள் பெறும் வழிகள், மின் னிலக்கம் பற்றிய அவர்களின் அறிவு, பொதுமக்கள் மின்னி லக்க யுகத்தில் ஈடுபடுவது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் உத்திகள் அந்தத் திட்டத்தில் இருக்கும். விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
ஏழு வயதிற்கும் 12 வயதிற்கும் இடைப்பட்ட சிறார்கள் 'கோடிங்' எனும் நிரலிடுதல் வகுப்பில் கலந்துகொள்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

