எட்டு மாதங்களாக செயலற்றுக் கிடக்கும் 72 வயது முதியவர்

எட்டு மாதங்களாக செயலற்றுக் கிடக்கும் 72 வயது முதியவர்

1 mins read

எட்டு மாதங்களுக்கு முன்பு கார் மோதியதில் காயமடைந்த 72 வயது திரு இங் யூ ஐ, இன்னும் முழுவதுமாகச் செயலற்ற நிலையில் உள்ளதாக அவரது மகன் திரு இங் சீ சியே, 50, நேற்று கூறி னார். ஒரு காலத்தில் நெடுந்தொலைவு ஓட்டங்களில் பங்கேற்ற தமது தந்தை, இப்போது பராமரிப்பாளர் களின் உதவியை முற்றிலுமாக நம்பியுள்ளதாக அவர் சொன்னார். "தந்தையை இந்த நிலையில் பார்ப்பது மனதிற்குச் சோகத்தைத் தருகிறது. அவரது நிலையில் முன் னேற்றம் ஏற்படுவது கடினம் என மருத்துவர் கூறிவிட்டார். அவர் துடிப்பாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட்டவர். இப்போது ஒவ் வொரு மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை குழாயின் உதவியுடன் அவருக்கு மூக்கு வழியாக உணவு செலுத்தப் பட வேண்டியுள் ளது," என்றும் கூறினார் அவரது மகன்.