கடந்த 2013ஆம் ஆண்டு ஜன வரியில் மோசடி குற்றங்களை ஒப்புக்கொண்ட மலேசிய ஆடவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப் பட்டிருந்தார். ஆனால் இரு மாதங்கள் கழித்து விரைவுப்படகு மூலமாக சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறிய அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி கோலாலம்பூரில் பிடிபட்டார். பின்னர் மூன்று நாட்களில் அவர் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் சிங்கப்பூரிலிருந்து தப்பிய குற்றத்தை டே சீ பூன், 29, ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு நேற்று 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரைவிட்டு சட்ட விரோதமாக வெளியேறிய ஒரு குற்றச்சாட்டையும் $16,750 மதிப் பிலான மோசடி செய்த மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

