கேன்பரா ஸ்திரீட்டில் உள்ள வீவக கட்டுமானத் தளத்தில் தவறி விழுந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், 'ஈஸ்ட்கிரீட்@கேன்பரா' திட்டத் தின் கீழ் அங்கு அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த ஊழியர், கட்டடத்தின் 13வது மாடி யில் தூண்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தார் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் நிகழ்ந்த சம்பவத்தில் ஊழியர் பாதுகாப்பு சாதனங்களை அவர் அணிய வில்லை என்று நம்பப்படுகிறது. சம்பவ இடத்திலேயே 44 வயது சீன நாட்டவர் இறந்துவிட்டதை காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் உறுதி செய்தனர்.
வீவக கட்டுமான தளத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்
1 mins read

