டிரம்ப்-கிம் சந்திப்பு இங்கு நடைபெறும் சாத்தியம் அதிகம்

டிரம்ப்-கிம் சந்திப்பு இங்கு நடைபெறும் சாத்தியம் அதிகம்

1 mins read

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்சநிலை மாநாடு, இரு கொரியாக்களுக்கும் இடையிலான ராணுவமற்ற பகுதி­யில் நடைபெறாது என்று அறி­வித்திருக்கிறார். எனவே, சிங்கப்­பூரில் அந்தச் சந்திப்பு நடை பெறு­வதற்கான சாத்தியம் வலு­வாக உள்ளதாக அண்மை தக­வல்கள் கோடிகாட்டுகின்றன.

உச்சநிலை மாநாட்டுக்கான தெரிவுகள் இரண்டாகச் சுருக்கப் பட்டதாகத் திரு டிரம்ப் முன்பு தெரிவித்திருந்தார். கொரிய எல்­லையில் உள்ள ராணுவமற்ற பகுதி­யும் சிங்கப்பூரும் அந்த இரண்டு தெரிவுகள் என அவர், நைஜீரிய அதிபர் முகமது புகாரி­யிடம் கூறி­யிருந்ததாக 'வால் ஸ்திரீட் ஜர்னல்' நாளிதழ் தெரி­ வித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாநாட்டை சிங்கப்­பூரிலே நடத்த அமெரிக்க அதி­ காரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்­பதாக சிஎன்என் செய்தி நிறு­வனம் தெரிவித்தது.