ஊழியர்களின் நலன் மேம்பாடே மனிதவள அமைச்சின் இலக்கு

1 mins read
e3ac079a-ec96-477e-9ae0-9a36fff2af6e
-

சிங்கப்பூரில் வரும் 2028வது ஆண்டுவாக்கில் வேலையிட மர ணங்கள் பலி விகிதத்தை 100,000 ஊழியர்களுக்கு 1க்கும் குறைவாக ஆக்குவது மனிதவள அமைச்சின் இலக்காக இருக்கிறது. அதிபர் உரைக்கான பிற்சேர்க் கையில் இந்த அமைச்சு, இந்த இலக்கை வெளியிட்டு இருக் கிறது. முதிய ஊழியர்களுக்கு அதிக ஆதரவு அளிப்பது, குறைந்த வருமான ஊழியர்களின் வேலைகள், தேர்ச்சிகள், சம்பளம் மேம்பட தோதாக திட்டங்களை நடைமுறைப்படுத்துவது; பராமரிப் புச் சேவை வழங்கும் பொறுப்புடன் கூடிய ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றின் மூலம் எல்லாரையும் உள்ளடக்கும் அணுகுமுறையைப் பேணி வளர்க் கப்போவதாக இந்த அமைச்சு குறிப்பிட்டு இருக்கிறது.

துவாசில் இருக்கும் Third Place என்ற காப்பிக்கடையில் முழுநேர உதவி யாளராக வேலை பார்க்கும் 83 வயது கோ கோவ் யின். இவரைப் போன்ற முதிய ஊழியர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்