சிங்கப்பூரர்கள் அனைவரும் நீண்டகாலம், மனஅமைதியுடன் நல்வாழ்வு வாழவேண்டும் என் பதே சுகாதார அமைச்சின் இலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில், சிங்கப்பூரின் சுகாதார பராமரிப்பு முறையில் பெரிய மாற் றங்கள் தொடங்குவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரி வித்து இருக்கிறார். அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் தன் முன்னுரிமைகள், அமைச்சின் இலக்குகள் முதலான பலவற்றை யும் அவர் வெளியிட்டுள்ளார்.
சுகாதாரப் பராமரிப்புக்கு அப் பாலும் சுகாதாரம்; மருத்துவ மனைக்கு அப்பாலும் சமூகம்; தரத்திற்கு அப்பாலும் மதிப்பு என்ற ரீதியில் சுகாதாரப் பராமரிப்பு முறையில் மாற்றங்கள் இடம்பெறுவ தாக அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் வெற்றிகரமான முறையில் மக்கள் முதிர்ச்சி அடை வதை மேம்படுத்துவதற்கும் இம் மாற்றங்கள் உதவும் என்றாரவர்.
குடிமை வட்டாரத்தில் கார்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையின் போது இடம்பெற்ற பல்வேறு நடவடிக்கைகளில் பலரும் கலந்துகொண்டனர். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றான உடலுறுதி பயிலரங்கு ஒன்றில் தாளத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியில் இவர்கள் ஈடுபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

