பேருந்துகள் மோதல்; 30க்கு மேற்பட்டவர்கள் காயம்

பேருந்துகள் மோதல்; 30க்கு மேற்பட்டவர்கள் காயம்

1 mins read
ddf0a3d8-0013-4ba2-be06-88bee7d66258
-

புக்கிட் பாத்தோக்கில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதை அடுத்து 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பழைய ஜூரோங் ரோட்டுக்கு அருகில் ஜாலான் ஜூரோங் கெச்சிலில் நிகழ்ந்த விபத்து குறித்து நேற்று காலை 9 மணி யளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காவல் துறை குறிப்பிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. காயமடைந்தவர்களில் 14 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத் துவமனைக்கும் 14 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக் கும் ஐவர் டான் டோக் செங் மருத் துவமனைக்கும் கொண்டுசெல்லப் பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

அவர்கள் அனைவரும் சுய நினைவுடன் இருந்ததாக காவல் துறை தெரிவித்தது. காயம் அடைந்தோரில் கர்ப்பிணி ஒரு வரும் இருந்தார். பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஒன்றின் மீது பேருந்துத் தட எண் 157 கொண்ட எஸ்பிஎஸ் பேருந்து மோதியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டேமி டான் கூறினார்.

பேருந்து நிறுத்தத்தின் தடுப்புத் தூணில் மோதி நின்ற எஸ்பிஎஸ் பேருந்தின் முன்புறக் கண்ணாடி நொறுங்கியிருந்தது. அதன் முன்பக்க பம்பரும் சேதமடைந்தது. எஸ்எம்ஆர்டி பேருந்தின் பின்புறம் நெளிவுகள் காணப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்