சிங்கப்பூரின் தலைவர்கள் நல்ல கொள்கைகளைச் செயல் படுத்தி வருகின்றனர். ஆயி னும் அந்த கொள்கைகள் இன் னும் மெருகூட்டப்படலாம் என நீ சூன் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா கருத்துரைத்திருக்கிறார். நீ சூன் சவுத்தில் மறதி நோய் உள்ளோருக்கு உதவுவோ ருக்கான பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தி யாளர்களிடம் அவ்வாறு கூறி னார். "இதயம் இருக்கிற தலை வர்களைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் நாம் பாக்கிய சாலிகள். மக்களின் ஆதரவை அவ்வளவாகப் பெறாத கொள் கைகளை சில நேரங்களில் அவர்கள் வகுத்துள்ளனர். ஆயினும், நாட்டின் நீண்டகால நன்மைக்காக அவர்கள் அவ் வாறு செய்கிறார்கள்," என்று திருவாட்டி லீ சொன்னார். "குறைகூறல்களைத் தாங் கிக்கொண்டு கொள்கைகளை அவர்கள் செயல்படுத்துகின் றனர்,"என்றார் அவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா: அரசாங்கக் கொள்கைகள் மெருகூட்டப்படலாம்
1 mins read
-

