சாங்கி விமான முனையம் நான்கின் புறப்பாட்டு மையத்திற்கு விருதுகள்

சாங்கி விமான முனையம் நான்கின் புறப்பாட்டு மையத்திற்கு விருதுகள்

1 mins read

சாங்கி விமான முனையம் நான்கின் புறப்பாட்டு மையத்திற்குச் செல்வோர், மாறுபட்ட அம்சம் ஒன்றைக் கவனித்திருக்கலாம். அங்கு கம்பங்கள் ஏதும் இல்லை. மேற்கூரையில் 60 மீ. நீள எஃகுச் சட்டம் பொருத்தப்பட்டு உள்ளது. இது போன்ற புதுமையான அம்சங்களைக் கொண்டுள்ள புதிய முனையத்தின் வடிவமைப்பாளரான பொறியாளர் திரு லாய் ஹுவென் போவுக்கு கட்டட கட்டுமான ஆணையம் விருதுகளை வழங்கியுள்ளது. 16 மில்லியன் வருகையாளர்களைச் சமாளிக்கக்கூடிய அந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய 30 மாதங்களாகின.