சிங்கப்பூரின் ஆகப் பழமையான தாய்லாந்து பெளத்த ஆலய 100வது ஆண்டு நிறைவு விழா

சிங்கப்பூரின் ஆகப் பழமையான தாய்லாந்து பெளத்த ஆலய 100வது ஆண்டு நிறைவு விழா

1 mins read
fa781a7f-728b-471f-a6d2-fc6d9b96bf08
-

சிங்கப்பூரின் ஆகப் பழமையான தாய்லந்து பெளத்த ஆலயம் ஒன்று, தனது 100வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி உள்ளது. 'வாட் ஆனந்த மேட்யாரமா' என்ற அந்த ஆலயத்திற்குப் பக்தர்கள் பல்லாண்டுகளாகச் சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். தொடக்கத்தில் குடிசைபோலத் தோற்றமளித்த ஆலயம், தற்போது நவீன அம்சங் களைக்கொண்டு பிரம்மாண்ட மாகக் காணப்படுவதாக, அங்கு செல்லும் பக்தர்களில் ஒருவரான 64 வயது திரு லிம் கியென் பூன் கூறினார். அந்த ஆலயத்தின் வரலாற்றைச் சிறப்பிக்கும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார். லுவாங் போர் ஹோங் தம்மரத் தனாவ் என்ற பெளத்தத் துறவி யால் 1918ல் ஆலயம் நிறுவப் பட்டது. தாய்லந்துக்கு வெளியே, தாய்லந்து அரச குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கோயில் இதுவாக உள்ளது.

விருந்து நிகழ்ச்சியின்போது ஆலயத்தின் தலைமைத் துறவியான சாவ் கூன் பிரதேப் சித்திவிதேஷ் உடன் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) உரையாடினார். அவர்களுடன் பிரதமர் அலுவலக அமைச்சரும் சட்ட, நிதி, கல்வி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜாவும் (வலக்கோடி) நிகழ்ச்சியில் பங்கேற்றார். படம்: சாவ்பாவ்