புருணையில் பயிற்சி வீரர்களைப் பார்வையிட்ட அதிபர் ஹலிமா

புருணையில் பயிற்சி வீரர்களைப் பார்வையிட்ட அதிபர் ஹலிமா

1 mins read
31771fd5-b896-4c27-9879-da8d919d70bb
-

சிங்கப்பூர் ஆயுதப் படையின் பயிற்சி ராணுவ அதிகாரிகள் புருணையில் மேற்கொண்டிருக்கும் பயிற்சியை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று பார்வையிட்டார். இத்தகைய வெளிநாட்டுப் பயிற்சி கள் அவர்களது திறன்களையும் நம்பிக்கையையும் வளர்க்க உத வும் என்றார் அதிபர். நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அதி பர் ஹலிமா புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவானிலிருந்து அந்நாட்டின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள டெம்புரோங்குக்குச் சென்று அங்கு ராணுவ அதிகாரி பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் வீரர் களுடன் நேற்று உரையாடினார்.

(வலமிருந்து) ராணுவத் தலைவர் கோ சி ஹவ், அதிபர் ஹலிமா யாக்கோப், அவரது கணவர் முகமது அப்துல்லா அல்ஹப்‌ஷி, நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியக் ஆகியோர் டெம்புரோங்கில் இருக்கும் உண்ணக்கூடிய பழங்கள், தாவரங்களைப் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்