ஞாபகமறதி நோயாளிகளுக்காக எட்டு பாதுகாப்பு நிலையங்கள்

ஞாபகமறதி நோயாளிகளுக்காக எட்டு பாதுகாப்பு நிலையங்கள்

1 mins read

'டிமென்‌ஷியா' எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏற்ற பகுதியாக நீ சூன் சவுத் உருவெடுக்கவுள்ளது. ஞாபகமறதி நோயால் பாதிக்கப் பட்டு காணாமல்போன, சுற்றித் திரியக்கூடியவர்களைப் பொது மக்கள் கண்டால் அவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பாக சேர்க்கக் கூடிய 'டிமென்‌ஷியா கோ-டு பாயின்ட்' எனப்படும் 8 நிலையங் கள் இன்று அங்கு திறக்கப்பட உள்ளன. இது குறித்த அறிவிப்பை நீ சூன் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் லீ பீ வா நேற்று வெளியிட்டார்.

யீ‌ஷூனில் ஏற்கெனவே 14 அத்தகைய நிலையங்கள் உள்ளன. பராமரிப்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அந்த நிலையங்கள் 'டிமென்‌ஷியா' தொடர்பிலான உதவிகளையும் வழங்குகின்றன. இந்த நிலைங்களுக்குச் செல்லும் பாதையை மறந்துவிட்டு ஞாபகமறதி நோய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்டவர்க ளையும் இந்த நிலையங்களுக்கு அனுப்பிவிடுவதில் வர்த்தக நிறு வனங்களும் சேர்த்துக்கொள்ளப் பட்டு உள்ளன.