கல்வி முதல் வீடமைப்பு வரை பரிந்துரைகளை முன்வைத்த ஃபெங்ஷான் எம்.பி. ஷெரல் சான்

கல்வி முதல் வீடமைப்பு வரை பரிந்துரைகளை முன்வைத்த ஃபெங்ஷான் எம்.பி. ஷெரல் சான்

1 mins read
41221819-ff7b-440e-b111-cd2504d2bbd7
-

அதிபராகப் பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கடந்த வாரம் தொடங்கி வைத்துப் பேசிய திருவாட்டி ஹலிமா யாக்கோப், நான்காம் தலைமுறை தலைவர்கள் தங்களது காலத்தில் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்க துணிச் சலான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரது உரை மீதான விவா தத்தை நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கி வைத்த ஃபெங்ஷான் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரல் சான், கல்வி, மனிதவளம், வீடமைப்பு, முத்தோர் பராமரிப்பு, மகளிரின் லட்சியங்கள் போன்று பலதரப்பட்ட விவகாரங்க ளில் யோசனைகளை முன்வைத் தார். அமைச்சரவையின் நான்காம் தலைமுறைத் தலைவர்களால் பெரும்பகுதி எழுதப்பட்ட உரையை ஆற்றிய திருவாட்டி ஹலிமாவுக்கு நன்றி கூறி விவாதத்தைத் தொடங் கினார் அவர்.

ஃபெங்ஷான் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரல் சான், கல்வி, மனிதவளம், வீடமைப்பு, முத்தோர் பராமரிப்பு, மகளிரின் லட்சியங்கள் போன்று பலதரப்பட்ட விவகாரங்களில் யோசனைகளை முன்வைத்தார். படம்: SGOV.SG