ஹாலந்து ரோட்டில் ஒருபக்கம் கவிழ்ந்த லாரி; ஓட்டுநர் காயம்

ஹாலந்து ரோட்டில் ஒருபக்கம் கவிழ்ந்த லாரி; ஓட்டுநர் காயம்

1 mins read

இணையப் பேரங்காடியான 'ரெட்மார்ட்'டின் லாரி ஒன்று, ஹாலந்து ரோட்டுக்கும் பெல்மோண்ட் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அதன் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்து பற்றிய தகவல் நேற்று காலை 7.30 மணிக்குக் கிடைத்ததாகக் போலிசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஓட்டுநர் தேசியப் பல்கலைக்கழக மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறு காயங்களுடன் தப்பித்த 37 வயது ஓட்டுநர் பின்னர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.