சொத்து மேம்பாட்டாளர்கள் கடந்த மாதம், எக்சிகியூடிவ் கொண்டோமினியம் உட்பட 1,325 தனியார் வீடுகளை விற்றுள்ளனர். மார்ச்சில் விற்கப்பட்ட அத்தகைய வீடுகளின் எண்ணிக்கை 788. மார்ச் மாதத்தைக் காட்டிலும், ஏப்ரலில் விற்கப்பட்ட தனியார் வீடுகள் 68% அதிகம். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் விற்கப்பட்ட தனியர் வீடுகளுடன் (1,938 வீடுகள்) ஒப்புநோக்க, இவ்வாண்டு விற்கப்பட்ட வீடுகள் 31.6% குறைவு. நகர மறுசீரமைப்பு ஆணையம், தனது கருத்தாய்வில் திரட்டப்பட்ட அந்த புள்ளிவிரவங்களை நேற்று வெளியிட்டது. கடந்த மாதத்தில் விற்பனையான, எக்சிகியூடிவ் கொண்டோமினிய வீடுகள் அல்லாத தனியார் வீடுகளின் எண்ணிக்கை 729. அதே எண்ணிக்கை மார்ச்சில் 716ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலிவல் அந்த எண்ணிக்கை 1,567.
மார்ச் முதல் ஏப்ரல் வரை: தனியார் வீட்டு விற்பனை 68% உயர்வு
1 mins read

