மே மாதத்தின் பிற்பகுதியில் அதிக மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையுடன் கூடிய வெப்பமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. ஆறு முதல் எட்டு நாட்களுக்கு, காலையின் பிற்பகுதியிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்தின் கடைசி பகுதியில், இடியுடன் கூடிய மழை அதிக இடங்களில் பெய்யக்கூடும். ஆண்டில் மே, ஆக அதிக வெப்பமான மாதங்களில் ஒன்று. தினசரி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டலாம்.
அதிக மழை, வெப்பநிலை அதிகரிக்கும்
1 mins read

