நடைபாதையில் வாகனம் ஏறியதில் சைக்கிளோட்டி காயம்

நடைபாதையில் வாகனம் ஏறியதில் சைக்கிளோட்டி காயம்

1 mins read

தியோங் பாருவில், பின்னால் வந்த வாகனம் மோதியதால் வாகனம் ஒன்று, நடை பாதையின் மீது ஏறியது. சாலைச் சந்திப்பில் காத்திருந்த சைக்கிளோட்டியின் சைக்கிள் இதனால் சேதமடைந்தது. இரண்டு கார்களும், சைக்கிளும் பாதசாரி ஒருவரும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து நேற்று முன்தினம் (மே 15) நடந்ததாகக் காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது. கறுப்பு பிஎம்டபள்யூ கார் ஒன்று, சாலைச் சந்திப்பில் வளையும் போது அதற்கு முன்னால் இருந்த வெள்ளை காரை மோதியதாகத் தெரிய வந்தது. அந்த கார் சாலையோர நடைபாதையில் ஏறி, அங்கு காத்திருந்த பாதசாரியின் சைக்கிளைச் சேதப்படுத்தியது. சைக்கிள் பலத்த சேதமடைந்து காணப்பட்டதாக ஃபேஸ்புக்கில் பதி வேற்றம் செய்யப்பட்ட படங்கள் காட்டுகின்றன. சைக்கிளின் பாகங்கள் சிதறி, அந்த இடத்திலிருந்த மற்றொரு பாத சாரியை தாக்கியது.