சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவை யாளரின் மரணத்தின் தொடர்பில் இன்னும் பல அதிகாரிகளிடம் புலன் விசாரணை செய்யப்படு கிறது. இவர்களில் நால்வரின் பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரல் கொக் யுவென் சின் மரணமடைந்ததன் தொடர்பில் குடிமைத் தற்காப்புப் படையின் இரு அதிகாரிகள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். போலிசா ரின் புலன் விசாரணை முடிவடை யும் வரை இருவரும் அரை சம்பளத்தில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
அவர்களில் ஒருவர் முதலாம் நிலை வாரன்ட் அதிகாரி, மற்றொருவர் ஸ்டாஃப் சார்ஜன்ட். இருவரும் கார்ப்பரல் கொக் சேவையாற்றிய அதே நிலையத்தில் அதே நேரப்பணியில் இருந்தனர். ஜூன் முதல் தேதி பதவி உயர்வு பெறவிருந்த நால்வரின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

