இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத் திலுள்ள புனே நகரப் பெருந்திட்டத் துடன் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் நகரத்தின் புதிய விமான நிலையத்தை உருவாக்கவும் சிங்கப்பூர் உதவும். சிங்கப்பூர் -= மகாராஷ்டிரா கூட்டுக் குழுவின் முதல் கூட்டத் தில் இந்தியா சென்றுள்ள தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந் திர பட்நாவிஸும் நேற்று பங்கேற்று, மகாராஷ்டிராவில் சிங்கப்பூர் முதலீடு செய்வதற்கான திட்ட வடிவத்தில் கையெழுத்திட்டனர் என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூருக் கும் புனேயின் பெருநகர மேம்பாட்டு ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத் தானதையும் இருவரும் பார்வை யிட்டனர். தொழில்நுட்ப மையமாகவும் வாகனங்கள், ரசாயனங்கள் உற் பத்தி மையமாகவும் திகழும் புனே, மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாவது நகரமாகத் திகழ்கிறது.
தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் (வலமிருந்து மூன்றாவது) மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸும் (இடமிருந்து இரண்டாவது) சிங்கப்பூர், இந்திய அதிகாரிகளுடன். படம்: வர்த்தக தொழில் அமைச்சு

