அரசாங்கம் எடுக்கக்கூடிய மக்கள் வரவேற்பை பெறாத முடிவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
நாட்டை வழிநடத்துவதில் நான்காவது தலைமுறையினர் பெரிய பங்கை ஆற்றும்போது மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார் திரு லீ. தங்களது அமைச்சுகளையும் திட்டங்களையும் மேற்பார்வை யிடுவது, தங்களது யோசனை களை சிங்கப்பூரர்களுக்கு விளக் குவது முதல் கொள்கைகளை செயல்படுத்தி, அவற்றைச் செயலாக்கம் காணச் செய்வது வரை அனைத்திலும் இது முக்கியம் என்றார் அவர்.
மலேசியாவில் பொருள், சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டதையும் அது அண்மைய தேர்தலில் எப்படி கடும் விவாதப் பிரச்சினையானது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

