பிரதமர்: ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர்

பிரதமர்: ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர்

1 mins read
794a22b5-e34a-4141-9c6d-bf44d41ce22d
-

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலுக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தாம் எதிர்பார்ப்பதாக திரு லீ கூறினார். சிங்கப்பூரின் அடுத்த பொதுத்தேர்தல் 2021ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க அடுத்த பொதுத் தேர்தல் வரை கால அவகாசம் இருப்பது குறித்து திரு லீ மகிழ்ச்சி தெரிவித்தார். இது நான்காம் தலைமுறை தலைமைத்துவக் குழுவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்றார் அவர். மிகச் சிறந்த வேட்பாளரை அடையாளம் கண்டு அவரை நாட்டின் அடுத்த பிரதமராக குழு தேர்ந்தெடுக்கும் என்று திரு லீ கூறினார்.