இந்தியர்களை முதன்மையாகக் கொண்டு சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படவுள்ள தாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்துள்ளார். இந்தியர்கள், இளையர்கள், மகளிர், ஓராங் அஸ்லி எனப்படும் பழங்குடி மக்கள் ஆகியோரின் பிரச்சினைகளைக் கையாள்வதற் காக அமைக்கப்படவிருக்கும் அந்தப் பணிக்குழுவுக்குத் தாமே தலைமை வகிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "மிக முக்கியமானது இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை ஆராய்வது," என்றார் அவர்.
மலேசியாவில் சிறுபான்மைச் சமூகத்தினர் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பாக இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்தச் சிறப்புப் பணிக்குழுவில் உள்துறை, தற்காப்பு அமைச்சுகளும் சம்பந்தப்பட்டிருக்கும்.

