'வர்த்தகங்களுக்கு உதவ உரிம விதிமுறைகள் எளிமையாக்கப்படும்'

'வர்த்தகங்களுக்கு உதவ உரிம விதிமுறைகள் எளிமையாக்கப்படும்'

1 mins read
94827043-0386-4f08-b700-579fb9e30574
-

தொழில்முனைவர்கள் தங்கள் வர்த்தகங்களை மேற்கொள்ள தேவையற்ற இடையூறுகளை இனி சந்திக்க வேண்டியிருக்காது. மேலும் அது தொடர்பான உரிமங் களும் இனி எளிமையாக்கப்படும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். பொருளியல் வளர்ச்சியிலும் பொருளியல் முதிர்ச்சியடையும் போதும் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்க இந்த நடை முறைகள் உதவும் என்றும் திரு சீ தெரிவித்தார்.

எளிமையாக்கப்படும் உரிமங்க ளின் மூலம் பயனடைவோரில் 'பிஞ்சை ப்ரூ' எனும் பீரை உரு வாக்கிய நன்யாங் தொழில்நுட்பப் பல்கைலைக்கழகத்தின் (என்டியு) மூன்று மாணவர்களும் அடங்கு வர். அவர்கள் தங்கள் பல்கலைக் கழக வசிப்பிடத்தில் இந்த பீரை உருவாக்கி வருவதை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் என்டியு கண்டு பிடித்து அதை அவர்கள் உடனடி யாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுபற்றி பேசிய திரு சீ, "அண்மையில் திரு ராகுல் இமந் திரா, அபிலேஷ் சுப்பராமன், ஹீத் தேஷ் அல்வானி ஆகியோரைச் சந்தித்தேன். "அப்போது அவர்கள் தொழில் தொடங்க நினைக்கும் வேட் கையைத் தடுக்கும் தேவையற்ற இடையூறுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பேசி னேன்.

தாங்கள் உருவாக்கிய 'பிஞ்சை ப்ரூ' எனும் பீருடன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் (இடமிருந்து) ராகுல் இமந்திரா, அபிலேஷ் சுப்பராமன், ஹீத்தேஷ் அல்வானி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்