சண்முகம்: குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

1 mins read

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரரான தேசிய சேவையா ளர் கார்ப்பரல் கொக் யுவென் சின்னின் மரணத்துக்குக் கார ணமானவர்களுக்கு எதிராக குற் றவியல் நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரி வித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய திரு சண்முகம், "இதன் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்க ளுக்கு எதிராக பெரும்பாலும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவரை இச்சம்ப வத்தை ஆராய்ந்த தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் இதை என்னிடம் தெரிவித்தது," என்றார்.

"சம்பவம் தொடர்பான விவ ரங்களைப் பார்க்கையில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என்று கூறிய அமைச்சர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் உள்துறை அமைச்சின் அமைப்பு களும் இதன் தொடர்பான விதி முறைகளை ஆய்வு செய்து வரு கின்றன என்றும் முரட்டுத்தன மான கேலி, அதிகாரபூர்வமற்ற நடத்தை போன்றவற்றுக்கு புதிய ஒழுங்கு நடவடிக்கைகள் அறி விக்கப்படும் என்றும் சொன்னார்.