கவச வாகனத் தலைவர்களுக்குக் கடுமையான பயிற்சிப் பாதுகாப்பு விதிமுறைகள்

1 mins read
9898bf8b-3a9f-493e-a8b8-6a3977509fe3
-

சிங்கப்பூர் ஆயுதப்படையின் கவச வாகனத் தலைவர்களுக்கான பயிற்சிப் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பயிற்சி யில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மூன்றாவது சார்ஜண்ட் கெவின் சான் அங்கு நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் மாண்டார். ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ் லாந்து நகரில் வருடாந்திர ராணு வப் பயிற்சியின்போது ஒரு கவச வாகனத்தின் தலைவராக சான் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, கவச வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்தது. அதன் காரணமாக இந்தக் கடுமையான விதிமுறைகள் நடப் புக்கு வருவதாக தற்காப்பு அமைச் சர் இங் எங் ஹென் நேற்று நாடா ளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து நகரில் ஆண்டுதோறும் நடக்கும் கவச வாகனப்படை பயிற்சி. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்