சிங்கப்பூரில் உள்ள இளைய தலைமுறையினர் வெற்றிக் கனி யைச் சுவைக்க தங்களுக்கென ஒரு தனிக் குறிக்கோளை வகுத் துக்கொண்டு செயல்படுகிறார் கள் என்று தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் முகம் மது மாலிக்கி ஒஸ்மான் தெரி வித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிபரின் உரைக்கு நன்றி கூறும் நான்கா வது நாள் விவாதத்தில் பங்கேற்ற டாக்டர் மாலிக்கி, சிங்கப்பூரின் எதிர்காலத் தூண்களாக விளங் கும் இளையர்களின் விருப்பங்க ளையும் அக்கறைகளையும் புரிந்துகொள்ளுதல் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். "சிங்கப்பூரர்களின் பொது வான விருப்பமான ஐந்து 'சி'க் கள், அதாவது ரொக்கம், கார், கடன் பற்று அட்டை, கொண் டோமினியம், கன்ட்ரி கிளப் உறுப் பியம் ஆகியவற்றைப் பெறுவதில் இக்கால இளையர்கள் அக்கறை காட்டுவதில்லை. மாறாக அவர் களின் சொந்த விருப்பங்களே தனிப்பட்ட விருப்புகளாக உள் ளன," என்றார் அமைச்சர்.
தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் முகம்மது மாலிக்கி. படம்: GOV.SG

