தனிநபர் நடமாட்டக் கருவி விபத்து அதிகரிப்பு

தனிநபர் நடமாட்டக் கருவி விபத்து அதிகரிப்பு

1 mins read
2fd369de-2df4-47a4-995e-cde99f326fa9
-

நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டக் கருவிகள் தொடர் பிலான விபத்துகள் அதிக ரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு அத்தகைய விபத்துகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்து 128 ஆக பதிவாகின. கடந்த 2015ஆம் ஆண்டில் 19 விபத்துகளும் 2016ல் 42 விபத்துகளும் நிகழ்ந்ததாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நடைபாதைகளில் வேக வரம்பைக் குறைப்பது, தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, சாலை சந்திப்புகள், பேருந்து நிறுத்து மிடங்கள், கூட்டநெரிசல் உள்ள பகுதிகள் போன் றவற்றில் ஓட்டுநர்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களிலி ருந்து இறங்கி அவற்றைத் தள்ளிச் செல்வதைக் கட் டாயமாக்குவது உள்ளிட்ட நட வடிக்கைகளைத் தனிநபர் நட மாட்ட ஆலோசனைக் குழு பரிசீலிப்பதாக டாக்டர் லாம் குறிப்பிட்டார்.