அடிக்கடி கோளாறுகளுக்கு உள் ளாகும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் கட்டமைப்பைப் பழுதுபார்க்க தற்போது எடுத்துள்ள முடிவே சாத்தியமான ஒன்று எனப் போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். புக்கிட் பாஞ்சாங் பகுதியில் உள்ள சாலைகளுக்கு அதிகரித்த போக்குவரத்தைச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் இல்லாததால் எல்ஆர்டி சேவையைப் பேருந்துச் சேவைகளால் ஈடுசெய்ய இய லாது என்று நேற்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டியை பயன்படுத்தும் பயணிகள் கூட் டத்தைச் சமாளிக்க 40 ஈரடுக்கு பேருந்துகள் அல்லது 80 ஓர டுக்கு பேருந்துகள் மூன்று நிமிட இடைவேளையில் செயல்பட வேண்டியிருக்கும் என்று திரு கோ கூறினார். அப்படி பேருந்து சேவைகள் நடப்பில் இருந்தாலும் சுவா சூ காங்கிலிருந்து புக்கிட் பாஞ்சாங்கிற்கு சராசரியாக ஒரு பேருந்து பயணம் அரை மணிநேரம் எடுக்கும் என அவர் தெரிவித்தார். அந்த வட்டாரத்தில் கார்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டால் மட்டுமே பேருந்து முறை பலனளிக்கக்கூடும் என்றார் அவர்.

