பெரியவர்கள் பாதுகாப்பு மசோதா: அதிக பாதுகாப்புக்கு உறுதி

பெரியவர்கள் பாதுகாப்பு மசோதா: அதிக பாதுகாப்புக்கு உறுதி

1 mins read
c13ee292-80ba-424e-87ab-48539f895efc
-

சுயமாக தங்களைப் பராமரித்துக் கொள்ள இயலாத முதியோரையும் உடற்குறையுள்ளோரையும் பாது காக்க 'எளிதில் பாதிக்கப்படக் கூடிய பெரியவர்கள் பாதுகாப்பு மசோதா' நேற்று நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. துன்புறுத்தலுக்கு ஆளானோர், கைவிடப்பட்டோர் உள்ளிட்ட எளி தில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர் களைப் பாதுகாக்க அரசாங்கத் திற்கு இந்த மசோதா அதிகாரம் வழங்கும். அதிக அபாயம் உடைய சம்ப வங்களில் கடைசிக்கட்ட முயற்சி யாக இந்த மசோதா அமைகிறது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ வலியு றுத்தினார்.

"நமது பெரியவர்கள் பாது காப்புக் கட்டமைப்பு நன்கு செயல் பட்டு வந்தாலும், சில வேளைகளில் குடும்பங்களும் சமூகமும் தலை யிடுவது ஆக்கபூர்வமாக இராது," என்று கூறிய அவர், "இதுபோன்ற சம்பவங்களில் அரசாங்கம் துடிப் பான அணுகுமுறையைக் கையாண்டு ஆரம்பகட்டத்திலேயே தலையிட வேண்டும். ஏனெனில், எந்தவித தாமதமும் கூடுதல் தீங்கை விளைவிக்கக்கூடும்," என்றார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் வீடு களுக்குள் சென்று ஒருவரின் மன, உடல் நலத்தைப் பரிசோதிக்க இந்தச் சட்டம் வகைசெய்யும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ