இர்ஷாத் முஹம்மது
தமிழர்களின் பழமையான வர லாற்றுக் குறிப்புகளை மீட்டெடுக் கும் முயற்சியாகவும் தென்கிழக் காசியாவில் தமிழர்களின் மத்தி யில் வணிக சங்கிலியை உருவாக்கும் ஒரு முயற்சியாகவும் கம்போடியாவில் உலகத் தமிழ் மாநாடு இன்றும் நாளையும் நடை பெறுகிறது. மொழி, இலக்கியம், பண்பாடு என்ற அடிப்படையில் நடத்தப்படும் மாநாடுகள் என்றில்லாமல் வர லாற்றை அறிவியல் ரீதியாக ஆவ ணப்படுத்துவதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டிருக்கும் என்று தமிழ்நாட்டின் பன்னாட்டு தமிழர் கட்டமைப்பின் தலைவரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான டாக்டர் திருத் தணிகாசலம் கூறியுள்ளார்.
இரண்டாம் நூற்றாண்டில் இருந்து பல்லவர்கள் ஆதிக்கம் உள்ள இடம் என்பதாலும் 1017ஆம் ஆண்டில் ராஜேந்திர சோழன் வெற்றிகொண்ட இடம் என்பதாலும் கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் மாநாட்டை நடத்த முடிவுசெய்ததாக அவர் தெரிவித்தார்.
"உலகில் ஆங்கிலம் வேகமாக பரவுவதற்கு வணிகம் ஒரு முக்கிய காரணம். "அதைபோல உலகளவில் வரலாற்றில் தமிழர் சமூகம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய வணிகத்தைக் கொண்டு வணிக சங்கிலியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் திரு ஒரிசா பாலு குறிப்பிட்டுள்ளார். சியாம் ரீப் நகரில் அமைந் துள்ள உலக மரபுடைமை இடங் களில் ஒன்றான அங்கோர் வாட் ஆலய வளாகத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு 82 நாடுகளிலிருந்து வரும் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்கின்றனர்.