வீவக அக்கம்பக்கப் பொது இடங்களின் துடிப்பூட்டும் திட்டங்களுக்கு அதிக நிதி

வீவக அக்கம்பக்கப் பொது இடங்களின் துடிப்பூட்டும் திட்டங்களுக்கு அதிக நிதி

1 mins read
51a6d390-b3d7-496a-a930-cfb9f0ffb100
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) குடியிருப்புகளிலுள்ள அக்கம்பக்கப் பொது இடங்களில் உள்ள துடிப்புத்தன்மையை மேம் படுத்துவதற்கும் ஒன்றுகூடலை ஊக்குவிப்பதற்குமான பல்வேறு யோசனைகளை மக்கள் முன்வைத் துள்ளனர். அத்தகைய திட்டங்க ளுக்கான நிதியை கழகம் அதிக ரித்திருக்கிறது. தாமான் ஜூரோங்கில் செங்கல் கலைக்கான ஓரம், 'லேகோ' கற் களால் கட்டப்படுகிற மேசை, நாற் காலி போன்ற புதுமையான திட்டங் களைக் கொண்டிருப்போர், $20,000 வரையிலான தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது அத்தகைய திட்டங் களுக்கு $10,000 வரை மட்டுமே மானியம் கொடுக்கப்பட்டு வரு கிறது. 'ஃப்ரெண்ட்லி ஃபேசஸ், லைவ்லி பிளேசஸ்' என்ற அந்தத் திட்டம், 2016ல் தொடங்கப்பட்டது.

நமது 'வீடமைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தல்' திட்டத்தின் கீழ் நேற்று திறக்கப்பட்ட மூன்றாவதும் ஆக அண்மைய புதிய தலைமுறை நகர மையமுமான யீ‌ஷூன் நகரச் சதுக்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்