ஜிஎஸ்டி உயர்வு குறித்த விளக்கம் முக்கியமானது

ஜிஎஸ்டி உயர்வு குறித்த விளக்கம் முக்கியமானது

1 mins read

வருங்காலத்தில் பொருள் சேவை வரி உயர்வை (ஜிஎஸ்டி) அமல் படுத்துவதன் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் மிகுந்த பாடுபட வேண்டும். அது வாக்காளர்களின் நம்பிக் கையைப் பெறுவதற்கு மட்டுமன்று. வரி உயர்வால் பாதிக்கப்படும் மக் களுக்குத் தகுந்த உதவி கிட்டு வதை உறுதி செய்வதிலும் உள் ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். "ஜிஎஸ்டி உயர்த்தப்படலாம் என்று மக்களுக்குப் பல முறை தெரிவித்துவிட்டோம். அது குறித்து விளக்கமளிக்க காலம் ஒதுக்கப்படும். "அவ்வாறு வரி உயர்த்தப்பட்டா லும் அவர்களுக்கு எவ்வித ஆத ரவு வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக விளக்கமளித்து அவர் களின் ஆதரவைப் பெறுவதில் முழு கவனம் செலுத்தப்படும். இதை நாங்கள் மிக முக்கியமான தாகக் கருதுகிறோம்," என்றும் பிரதமர் கூறினார்.