சாங்கி விமான நிலையத்தில் இரண்டு கார்கள் நேற்று முன்தினம் விபத்துக் குள்ளாகின. விபத்துக்குக் காரணம் என நம்பப்படும் 35 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஏர்போர்ட் பொலி வார்ட்டில் விபத்து நிகழ்ந்தது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரி வித்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு காரின் ஓட்டுநரான 33 வயது பெண் சாங்கி பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். மருத்துவமனைக்கு அனுப் பப்பட்டபோது அந்தப் பெண் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
சாலை விபத்து: ஆடவர் கைது
1 mins read

