ஏர்சாஃப்ட் துப்பாக்கி: சிறுவன் கைது

ஏர்சாஃப்ட் துப்பாக்கி: சிறுவன் கைது

1 mins read

ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள தனியார் வீடு ஒன்றுக்குள் ஏர்சாஃப்ட் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட் டுள்ளான். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. இரவு 7 மணி அளவில் லோரோங் எல் தெலுக் குராவ்வில் யாரோ ஒருவர் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக போலி சாருக்குத் தகவல் கிடைத்தது. சிறுவன் உலோக வேலி மீது ஏறி வீட்டுக்குள் நுழைந்ததாக நம்பப் படுவதாக சீனமொழி நாளிதழான ‌ஷின் மின் தெரிவித்தது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவ னின் கையில் துப்பாக்கி இருந் ததை அங்கிருந்த மூவர் பார்த்ததாக அறியப்படுகிறது. சிறுவனிடமிருந்தது ஓர் ஏர் சாஃப்ட் துப்பாக்கி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.