'தமிழோடு இணைவோம்: அழகே தமிழே' - கல்வி முகாம்

'தமிழோடு இணைவோம்: அழகே தமிழே' - கல்வி முகாம்

1 mins read
db1c19a4-19b8-408a-a268-c0c1e0eb40d8
-

'ஒருநாள் தமிழில் பேசாவிட்டால் அது வீணான நாள்' எஸ். வெங்கடேஷ்வரன் 'தமிழோடு இணைவோம்: அழகே தமிழே' என்னும் இரு நாள் கல்வி முகாம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு எற்பாட்டில் நேற் றும் சனிக்கிழமையும் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர், சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் தலைமை ஆசிரியர் திரு எஸ்.மனோகரன் வருகை புரிந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பயிற்சி வள உருவாக்கத் திட்ட பணிக்குழு தலைவர் திரு ஜெயராஜதாஸ் பாண்டியன் "ஒரு நாள் தமிழில் பேசாவிட்டால் அது வீணான நாள்" என்று குறிப் பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் "ஒரு மொழியின் மீது உணர்வு எற்பட்டால்தான் அந்த மொழியின் மீது பற்று ஏற்படும். அன்றாட நிகழ்வுகளில் தமிழ் வார்த்தைகளை எளிய முறையில் பயன்படுத்துவது அவசியம்," என்று கருத்துரைத்தார்.