தனது வாகனத்தால் இடித்து, பாதசாரி ஒருவருக்கு மரணம் விளைவித்த 28 வயது மாண வருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையும் வாகனம் ஓட்ட ஐந்தாண்டு தடையும் விதிக்கப் பட்டன. கெலிஸ்டென் எய்டன் கிலின் என்ற அந்த மாணவர், இருபது மணி நேரத்திற்கு மேல் உறங்காமல் இருந்தபோதும் கார் ஓட்டினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42ல் சென்று கொண்டிருந்தபோது காரின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார். கார் சுழன்று, பாதசாரிகளுக்கான நடைபாதையில் ஏறி, 41 வயது திருவாட்டி செரின் இங் மீது மோதியது. கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட திருவாட்டி இங் பலத்த காயமடைந்து, மாண்டார். விபத்து நிகழுமுன், தான் களைப்பாகவும் தூக்கக் கலக்கத் திலும் இருந்ததை விசாரணையின் போது எய்டன் ஒப்புக்கொண்டார். விபத்தைக் காட்டும் காணொளி, நீதிமன்றத்தில் நேற்று காண்பிக்கப் பட்டது.
தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டி பாதசாரிக்கு மரணம் விளைவித்த மாணவருக்குச் சிறை
1 mins read

