மின்விலைப்பட்டியல் முறை

மின்விலைப்பட்டியல் முறை

1 mins read

சிங்கப்பூர் தனது சொந்த, தேசிய அளவிலான மின்விலைப்பட்டியல் முறையை ஏற்றுக்கொண்டு செயல் படுத்தவுள்ளது. சொந்த, தேசிய அளவிலான மின்விலைப்பட்டியல் முறையாக 'பான் யூரோப்பியன் பொதுக் கொள்முதல் இணைய முறை'யை அதிகாரிகள் பயன்படுத்துவர் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சச்சரவுகள், பிழைகள், நடை முறைச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்து, வர்த்தகப் பரிவர்த்தனை களைத் துரிதப்படுத்த இந்த மின்விலைப்பட்டியல் முறை நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும். பிரிட்டன், ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட பத்து ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே இம்முறை யைப் பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பாவிற்கு வெளியே இந்த முறையைப் பயன்படுத்தவுள்ள முதல் நாடு சிங்கப்பூர்தான். தேசிய அளவிலான மின்விலைப் பட்டியல் முறையை அமல்படுத்து வது குறித்து இவ்வாண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்க லின்போது முதன்முதலாக அறி விக்கப்பட்டது.