சாங்கியில் கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் குறைந்தது மூவர் மீதும் பிரதான கட்டுமான ஒப்பந்ததாரர் மீதும் இம்மாதம் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை நிறைவுபெற்றிருக்கலாம் என்பதை இது கோடிகாட்டுகிறது. உள்ளூர் கட்டுமான நிறுவன மான ஓகேபி ஹோல்டிங்ஸ், தனக்குச் சொந்தமான ஓர் கிம் பியாவ் கான்ட்ராக்டர்ஸ் நிறுவனம், குழும நிர்வாக இயக்குநர் ஆர் தோ வாட், அதிகாரிகள் ஆலன் யீ, வோங் கியூ ஹை ஆகியோர் மே 30 ஆம் தேதியன்று நீதிமன்றத் தில் முன்னிலையாவர் என்று சிங்கப்பூர் பங்குச் சந்தையிடம் தெரிவித்தது. ஆலன் யீ, அந்த மேம்பாலச் சாலைக் கட்டுமானத் திட்டத்தின் இயக்குநர்; வோங் கியூ ஹாய், திட்டப் பொறியாளர்.
இடிந்து விழுந்த மேம்பாலச் சாலை: கட்டுமான நிறுவனம், ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்படும்
1 mins read
-

