ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத் தும் மருந்தைத் தேடும் முயற்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ரத்தப் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க உயிரணுக்களை மேலும் பயன் தரும் வகையில் எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை இவர்கள் காட்டியுள்ளனர். இந்த ஐந்து ஆராய்ச்சியாளர்களும் சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையம், சிங்கப் பூர் தேசிய பல்கலைக்கழகம், டியூக்=என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர் பொது மருத்துவ மனை ஆகியவற்றைச் சேர்ந்தவர் கள். தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப் படும் செயற்கை ரசாயன வகை ஒன்றைப் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது.
மாற்று அறுவை சிகிச்சைக்காக ரத்த உயிரணுக்களை உருவாக்கும் புதிய மூலக்கூறைக் கண்டுபிடித்துள்ள சிங்கப்பூர் குழு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்