அக்டோபரில் பொது பொட்டலப் பெட்டக முறை அறிமுகம்

1 mins read
fbeb5d41-a1c0-4e1f-acf1-db66f4c3d6f3
-

புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத போது, இணையம் வாயிலாக அவர்கள் வாங்கிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும்பட்சத் தில் அதைப் பெற்றுக்கொள்ள தாங்கள் அங்கு இல்லையே என்ற கவலை அவர்களுக்கு இனி தேவையில்லை. தேசிய அளவிலான பொது பொட்டலப் பெட்டக முறையின் ஓராண்டு அறிமுகத் திட்டம் இந்த இரு பேட்டைகளிலும் அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது.

இத்தகைய ஒருங்கிணைந்த பெட்டகங்கள் எம்ஆர்டி நிலை யங்கள், வீவக குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 250 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள பொட்டலங்களைப் பெற்றுக்கொள் வதற்கான பொதுவான இடங் களில் அமைந்திருக்கும். இந்தத் தகவலைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் நேற்று தெரிவித்தது. பொட்டலங்களை வீட்டில் பெற்றுக்கொள்ள இயலாத வாடிக் கையாளர்கள், அவர்களது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள இடம் ஒன்றில் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியை இந்த முறை ஏற்படுத்தித் தரும்.

ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல்லைக் கொண்டு பொது பொட்டலப் பெட்டகத்திலிருந்து தங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். படம்: சாவ்பாவ்