விசாக தினத்திற்கு முதல் நாளான இம்மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை குறிப்பிட்ட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அதிக நேரம் சேவையாற்றும். வடகிழக்கு வழித்தடம், டௌன்டவுன் வழித்தடம் ஆகியவற்றில் ரயில் சேவைகள் சுமார் 30 நிமிடம் அதிக நேரம் சேவையாற்றும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இதேபோல செங்காங், பொங்கோல் இலகுரக ரயில் சேவையும் நீட்டிக்கப்படும். ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதை அடுத்து, 21 பேருந்துச் சேவைகள் தங்கள் தங்கள் பேருந்துச் சந்திப்பு நிலையங்களிலிருந்து அதிக நேரத்திற்குச் சேவையாற்றும். 51A, 60A, 63M, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 291, 292, 293, 315, 325, 410W, 804 மற்றும் 812 ஆகியவை அந்த பேருந்துச் சேவைகள் ஆகும்.
விசாக தினத்துக்கு முதல் நாள்
1 mins read

