சிங்கப்பூரில் கனரக வாகனங் களுக்கான மூன்று வகை வேக கண்காணிப்புச் சாதனங்கள் இப் போது பரிசோதிக்கப்பட்டு வரு கின்றன. இந்தப் பரிசோதனை ஆகஸ்ட் மாதம் வரை தொடரும் என்று போக்குவரத்து போலிஸ் நேற்று அறிவித்தது. சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதம் ஆறாவது தடவையாக நேற்றுத் தொடங்கியது. அதில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. கனரக வாகனங்களை ஓட்டு வோருக்கும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் போதிப்பதை நோக்கமாகக் கொண்ட சாலைப் பாதுகாப்பு மாதத்தை உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், ரிபப்ளிக் பல துறை தொழில்கல்லூரியில் நேற் றுத் தொடங்கிவைத்தார். அளவுக்கு அதிக வேகத்தில் வாகனங்கள் ஓட்டிச் செல்லப்படு வதைத் தடுப்பதற்காக குறிப்பிட்ட கனரக வாகனங்களில் இப்போது வேக வரம்பு சாதனங்களைப் பொருத்தவேண்டியது கட்டாய மானதாக இருக்கிறது.
போக்குவரத்து போலிசும் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும் சாலை பாதுகாப்பு மாதத்தை நேற்றுத் தொடங்கின. உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், ஹார்லீஸ் டேவிட்சன் மோட்டார் சைக்கிளைப் பார்வை யிடுகிறார். சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் பெர்னார்ட் டே (வெள்ளை டி சட்டை) உடன் இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

