விரயமற்ற பொருளியலுக்கு அறிவார்ந்த தொழில்நுட்பம்

விரயமற்ற பொருளியலுக்கு அறிவார்ந்த தொழில்நுட்பம்

1 mins read
61e05e1a-a1d1-4b39-b0bc-90b8cc4d6370
-

வரும் 2030வது ஆண்டு வாக்கில் அறவே விரயமற்ற சமூகத்தை உருவாக்கவேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் நிர்ணயித்து இருக்கிறது. இந்த இலக்கு நிறை வேறவேண்டுமானால் அதற்கு அறிவார்ந்த தொழில்நுட்பம் மிக முக்கியம் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து இருக்கிறார். சுற்றுப்புறத்தில் அறிவார்ந்த தொழில்நுட்பம் காரணமாக ஏற் படக்கூடிய புரட்சிகளின் மூலம் 30,000 வேலைகளை உருவாக்க முடியும் என்று அமைச்சர் நம் பிக்கை தெரிவித்தார்.

ஃபேஸ்புக் வழியாக நடந்த நேரடி குழு விவாதிப்பில் அமைச்சர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட் டது. 'முழுமைப் பொருளியல்' மிக முக்கியம் என்று திரு மசகோஸ் வலியுறுத்தினார். இத்தகைய பொருளியலில் அறிவார்ந்த தொழில்நுட்பம் காரணமாக கழிவுகளும் பலன் தருபவையாக மாற்றப்படுகின்றன என்றார் அவர். கழிவுகளை நிர்வகிக்கின்ற தொழில்துறையை எடுத்துக்காட் டாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஃபேஸ்புக் வழியாக நடந்த நேரடி குழு விவாதத்தின்போது சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி பேசுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்