கட்டுமானச் செலவு: சிங்கப்பூர் 4வது இடம்

கட்டுமானச் செலவு: சிங்கப்பூர் 4வது இடம்

1 mins read

கட்டுமானச் செலவு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஆசியாவிலேயே சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள் ளது. முதல் இடத்தில் ஹாங் காங்கும் இரண்டாவது இடத் தில் மக்காவ்வும் மூன்றாவது இடத்தில் ஜப்பான் தலைநகர் தோக்கியோவும் உள்ளன. இந்தத் தகவல்களை உலக ளாவிய வடிவமைப்பு, ஆலோ சனை நிறுவனமான ஆர்காடிஸ் நடத்திய ஆய்வு தெரிவித் துள்ளது. உலகளாவிய நிலை யில் கட்டுமானச் செலவு அதிகம் உள்ள நாடுகளைக் காட்டும் ஆர்காடிஸ் நிறுவனத் தின் கட்டுமானச் செலவு குறியீட்டில் சிங்கப்பூர் 27வது இடத்தை வகிக்கிறது.

இவ்வாண்டில் உலகின் உள்ள 50 பிரதான நகரங்களில் கட்டடங்களைக் கட்டுவதற்காக ஏற்பட்ட செலவுகளை ஆய்வு கருத்தில் கொண்டது. 13 வகை கட்டடங்களைக் குறியீடு உள்ளடக்கியது.