பாதுகாப்புமிக்க கடன் அட்டை பயன்பாடு

பாதுகாப்புமிக்க கடன் அட்டை பயன்பாடு

1 mins read
93b59cb5-494b-451a-a9eb-57ad0e7fb36e
-

கடன்பற்று அட்டையைப் பயன் படுத்தி பணம் செலுத்தும் மிகுந்த பாதுகாப்புமிக்க முறையை உள்ளூர் ஃபின்டெக் நிறுவனமான டுஷே வும் ஓசிபிசி வங்கியும் இணைந்து தொடங்க இருக்கின்றன. இந்தப் புதிய முறை கைரேகைப் பதிவு அடிப்படையில் அமைந்து இருக்கும். கைரேகையைப் பதிவு செய்து கடன்பற்று அட்டையைக் கொண்டு பணம் செலுத்தும் முறை உலகிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும் என்று அறியப்படுகிறது. ஓசிபிசி வங்கியின் கடன்பற்று அட்டை சாதனங்களை வைத் திருக்கும் வர்த்தகர்களுக்கு டுஷே இந்தச் சேவையை வழங்கும். புதிய சாதனம் மிகவும் புத்தாக்கமிக்கது என்றும் திடமான மென்பொருளைக் கொண்டது என்றும் டுஷே நிறுவனம் கூறியது. மிகுந்த பாதுகாப்புமிக்க பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை இந்தச் சாதனம் வழங்கும் என்று டுஷே நிறுவனம் தெரிவித்தது.

கைரேகைப் பதிவைப் பயன்படுத்தி கடன்பற்று அட்டையின் வழி பணம் செலுத்தும் சாதனத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர். படம்: டுஷே நிறுவனம்