பிடோக் வட்டாரத்தில் டெங்கி காய்ச்சல் பரவி வருகிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை வரை 55 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத் தகவல் கூறு கிறது. அங்கு கடந்த இரு வாரங் களில் மட்டும் எட்டுப் பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் அப்பகுதியில் வேலை செய்பவர் என்றும் மற்ற அனைவரும் அவ்வட்டாரவாசிகள் என்றும் வாரியம் தெரிவித்தது. டெங்கியால் பிடோக் பகுதி யில் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அறியப்படு வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
அதிக அபாயமுள்ள பகுதி யாக அடையாளப்படுத்தப்படும் வகையில் டெங்கி பரவல் காணப் படும் இரண்டாவது வட்டாரம் இது. டெங்கிக் காய்ச்சலால் ஜூரோங் வெஸ்ட்டில் இதுவரை மூவர் உயிரிழந்துவிட்டனர். ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கடந்த இரு வாரங்களில் மேலும் 14 பேர் டெங்கியால் பாதிக்கப் பட்டனர். இதையடுத்து, அவ்வட் டாரத்தில் டெங்கி பாதிப்பு எண்ணிக்கை 90ஆக உயர்ந்தது.

