13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு

13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு

1 mins read
4f995fc6-642f-4901-ab1b-ff94956caa8c
-

அனுமதிக்கப்பட்ட வயதுக்குக் குறைவான பணிப்பெண்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த தன்பேரில் இரண்டு பணிப் பெண் முகவை நிறுவனங்கள் மீது குற் றஞ்சாட்டப்பட்டுள்ளது. வயது குறைந்தோர் தொடர் பிலான வேலை வாய்ப்பு முகவைச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்படு வது இதுவே முதல்முறை.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 'கேசா எம்பிளாய்மண்ட் ஸ்பெஷலி ஸ்ட்' முகவையைச் சேர்ந்த பிரதி நிதி ஒருவரும், 'விஸ்டா எம்பிளாய் மண்ட் சர்விசஸ்' முகவையைச் சேர்ந்த 35 வயது கோர் சியூ தியாங்கும், மியன்மாரிலிருந்து 23 வயதுக்கும் குறைவான பணிப் பெண்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த குற்றச்சாடை எதிர் நோக்குகின்றனர்.

நாவ் லா சான், டெட் டெட் பியோ வை ஆகிய இருவருக்கும் அப்போது 13 வயது என்று மனித வள அமைச்சு, தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு ஜூனுக்கும் ஜூலைக்கும் இடையே அதன் தொடர்பில் விசாரணைகள் நடத் தப்பட்டன. மனிதவள அமைச்சின் சேவைகள் நிலையம் சம்பவங்களை முதலில் கண்டுபிடித்தது. மனித வள அமைச்சின் அதி காரிகள் விசாரித்தபோது அந்த இரண்டு பணிப்பெண்கள் தங்களது உண் மையான வயதை ஒப்புக் கொண்டனர்.

'விஸ்டா எம்ப்ளாய்மண்ட் சர் விசஸ்' முகவையைச் சேர்ந்த கோர் சியூ தியாங்